வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் மாநகராட்சி நிர்வாகம் ஏற்றது-பொதுமக்களிடம் ₹1 வசூல்

வேலூர் : வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் மாநராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. பொதுமக்களிடம் ₹1 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் பழைய பஸ்நிலையத்திலிருந்து உள்ளூர் நகர பேருந்துகளும், தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்காக நவீன கட்டணம் கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் விட்டு இருந்தது. குறைந்து கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும் என்று விதிகளை மீறி பொதுமக்களிடம் ₹3 முதல் ₹5 வரை தனியார் வசூல் செய்து வந்தனர்.

இந்நிலையில் நவீன கட்டண கழிப்பிடத்திற்கான டெண்டர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அதை ஏற்று நடத்தி வருகிறது. சிறுநீர் மற்றும் மலம் கழிக்க குறைந்த கட்டமாக ₹1ம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி முழுவதும் உள்ள நவீன கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>