நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஐகோர்ட்டில் மாணவி மனு..!!

சென்னை: நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிக்கு எதிரான பாஜக வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தினி என்ற மாணவி மனுத்தாக்கல் செய்துள்ளார். மாணவர்கள் பிரச்சனைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மாணவி மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மாணவி மனுவை திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: