×

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே குருமலை மலைக்கிராமத்தில் 3 மாதத்தில் சாலை!: ஆட்சியர் உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊசுர் குருமலை மலைக்கிராமத்தில் 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலைப் பணிகளை 3 மாதத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பவுனை டோலிகட்டி தூக்கி சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்தது. அவசர உதவிக்காக 2 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவ மையம் ஓரிரு நாளில் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

Tags : Ruler ,Kurumalai Mountain ,Vallur , Vellore, Kurumalai Hill Village, Road, Collector
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...