×

செல்போன் நெட்வொர்க் கிடைக்காததால் 20 அடி உயரத்தில் அமர்ந்து பாடம் நடத்தும் ஆசிரியர்

குடகு: மொபைல் நெட்வொர்க்கிற்காக ஆசிரியர் ஒருவர் வீட்டின் அருகே பரண் அமைத்து பாடம் நடத்தி வருகிறார்.  கர்நாடகா மாநிலம், சோமவாரபேட்ைட  தாலுகா சிக்ககொளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் முள்ளூர்  அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது, கொரோனா பாதிப்பு  காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், ஆன்லைனில் பாடம்  நடத்தப்பட்டு வருகிறது. குடகு மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க்  கிடைக்காததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், சிக்ககொளத்தூரில் உள்ள வீட்டின் அருகில் 20 அடி உயரத்தில் மூங்கில்  மரங்கள் கொண்டு பரண் அமைத்து கூரையுடன் மரத்திலான வீட்டை சதீஷ் கட்டியுள்ளார்.   இதில் மாணவர்களுக்கு மொபைல் மூலம் பாடம் உட்பட நன்னெறிகளை போதித்து  வருகிறார். மேலும், அக்கம் பக்கத்தில் உள்ள மாணவர்களும் ஆன்லைனில் பாடம்  படிக்க இந்த பரணை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் இந்த செயலை  அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.


Tags : Teacher sitting at a height of 20 feet due to unavailability of cell phone network
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...