×

சரள் பென்ஷன் திட்டம்; எல்ஐசி அறிமுகம்

சென்னை: எல்ஐசி நிறுவனம் சரள் பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதில் பாலிசிதாரர்கள் முதலாவதாக, பாலிசி தொகையில் அல்லது கொள்முதல் தொகையில் 100 சதவீத ரிட்டர்ன் உடன் கூடிய  திட்டத்தை தேர்வு செய்யலாம். மற்றொரு திட்டமாக, கணவன், மனைவி இணைந்து ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம். இதன்படி, ஒருவர் இறந்த பிறகு, மற்றொருவருக்கு 100 சதவீத கொள்முதல் விலை ரிட்டர்ன் ஆக கிடைக்கும். உத்தரவாதம் உள்ள இந்த ஓய்வூதிய திட்டங்களில், www.licindia.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது எல்ஐசி அலுவலகங்களில் நேரடியாகவோ முதலீடு செய்யலாம்.

குறைந்த பட்சம் ஆண்டுக்குரூ.12,000 கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது வயது உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப மாறுபடும். வருடாந்திரமாக அல்லாமல் அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையிலும் பெற்றுக் கொள்ளலாம். உடனடி பலன் தரும் இத்திட்டத்தில்,ரூ.5 லட்சத்துக்கு மேலான கொள்முதலுக்கு ஊக்க சலுகை உண்டு. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் பயன்பெறலாம். முதலீடு செய்து 6 மாதங்களுக்கு பிறகு, அதற்கு எதிராக லோன் பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Introduction to Fluid Pension Scheme, LIC
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...