×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ தீபாவளி ரிலீஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படம், வரும் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், ‘அண்ணாத்த’. இப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

வரும் தீபாவளி பண்டிகை அன்று நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாவதை உறுதி செய்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இணையதளங்களில் நெட்டிசன்கள் ‘அண்ணாத்த’ படத்தின் போஸ்டரை வெளியிட்டது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் #அண்ணாத்ததீபாவளி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர்.


Tags : Annatta ,Diwali Relays ,Rajinikant ,Sun Pictures , Sun Pictures, Rajinikanth, Annatha, Deepavali
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு