மகாராஷ்டிராவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஜூன் மாத ஒதுக்கீடு முடிந்துவிட்டது, என்று ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த 2 தினங்களாக தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து பெங்களூரு வழியாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்  சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தன.

தடுப்பூசி பார்சல்களை எடுத்து செல்ல அரசு அதிகாரிகளும் விமான நிலையம் சென்றனர். மத்திய தொகுப்பான புனேவிலிருந்து நேற்று மாலை ஏற்கனவே 4.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இந்நிலையில் மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது இரவு விமானத்தில் வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் 10.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>