×

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.இப்போதுள்ள நடைமுறையின் படி, அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனராக, பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ எனப்படும், ஆர்டிஓ அலுவலகத்தில், வாகனத்தை  ஓட்டினால் மட்டுமே தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறைகளில் தான், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம், அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர்  பயிற்சி மையங்களில் பயிற்சி முடிப்பவர்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர்  உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அவர்களுக்கு  நேரடியாக லைசன்ஸ் வழங்கப்படும் .

Tags : RTO , No longer have to put 8 in the RTO office: the new system came into force
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...