×

கனடா நாட்டில் வரலாறு காணாத வெப்ப நிலை: கடந்த 5 நாட்களில் 486 பேர் உயிரிழப்பு

டொரோண்டோ: பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பருவம் தவறிப் பெய்யும் மழை, அதிகரிக்கும் வெப்பம் ஆகியவற்றால் விவசாயிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனடாவில் சில பகுதிகளில் வெப்ப அலை காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

கனடா நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் உள்ள வடமேற்குப் பிராந்தியங்களில் தற்போது அனல் காற்று வீசுகிறது. இதனையடுத்து, அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 121டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.  கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 200 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Canada , Canada, heat, death
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்