கோத்தகிரி அருகே சிறுத்தை சாவு

ஊட்டி: கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி, கடசோலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோத்தகிரி வனச்சரகர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ், கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இறந்து கிடந்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கலாம். இறந்து 20 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்பதால் உடல் முழுவதும் அழுகியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்பே சிறுத்தை இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும்’’ என்றனர்.

Related Stories:

More