×

ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் டிரோன்களை வைத்திருக்க, விற்பனை செய்யத் தடை

ஸ்ரீநகர் : வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டமான ரஜோரியில் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு விமானப்படை நிலையத்தில் டிரோன்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, டிரோன்கள் இந்திய பகுதியில் ஊடுருவி வருவதால் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வோடு கண்காணித்து வருகின்றனர்.

தாக்குதல் மட்டுமின்றி இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்தி வரவும் டிரோன்கள் பயன்படுத்தப்படும் நிலையில், காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜோரியில் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாவட்டத்தில் டிரோன்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டிரோன்கள் அது தொடர்பான பொருட்கள் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Jammu ,Kashmir , வெடிகுண்டு தாக்குதல்
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...