×

குன்னூரில் 40 நாட்களுக்கு பிறகு மார்க்கெட் கடைகள் திறப்பு

குன்னூர்:  குன்னூரில் 40 நாட்களுக்கு பிறகு மார்க்கெட் கடைகள் திறக்கப்பட்டன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனால் ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் மார்க்கெட் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், குறுகிய இடத்தில் இருப்பதால் குன்னூர் மார்க்கெட் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குன்னூர் வந்த கலெக்டரிடம் அண்ணா வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், மார்க்கெட் கடைகள் 40 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொருட்கள் வீணாகி வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், திறக்க அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் ஏ,பி,சி என 3 பிரிவுகளாக பிரித்து கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் குறைவாக இருந்த நிலையில் ஏ,பி என இரு பிரிவுகளில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Tags : Coonoor , In Coonoor Market stores open after 40 days
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...