×

ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு டாக்டர் ரெட்டி ஆய்வகம் சோதனை நடத்த ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

டெல்லி: ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் சோதனை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீலெட், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதனால் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனை முடித்து விட்ட டாக்டர் ரெட்டி லேப், 3-வது கட்ட பரிசோதனை நடத்த திட்டமிட்டது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசி போல் இரண்டு டோஸ்கள் போட தேவையில்லை என்றும் ஒரே டோஸில் கோவிட் நோய்க்கு எதிரான 79.8% எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டது. 



Tags : U.S. government ,Dr. ,Reddy , Russia, Sputnik Light Vaccine, United States, Denial
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!