சிவசங்கர் பாபாவின் ஆபாச சாட், வீடியோ சிக்கியது

சென்னை:  மாணவிகளிடம் சிவசங்கர் பாபா ஆபாச சாட் மற்றும் வீடியோ காலில் பேசியதற்கான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர். கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே ஒரு வார காலமாக அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையின்போது, சிவசங்கர் பாபாவை நேற்று சுசில்ஹரி சர்வதேச பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அங்கு அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையின்போது சுசில்ஹரி பள்ளியில் இருந்த லேப்டாப், பென்டிரைவ் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாச சாட் செய்ய இ-மெயிலை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த இ-மெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட இ-மெயிலை சைபர் ஆய்வகம் மூலம் ஆய்வு செய்தபோது, ஆபாச சாட் மற்றும் வீடியோ கால் பேசியதற்கான ஆதாரம் இருந்ததாக கூறப்படுகிறகிறது. இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிவசங்கர் பாபா ஆபாச சாட் மற்றும் வீடியோ காலில் பேசிய மாணவிகளின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் தயார் செய்து வருகின்றனர்.

Related Stories:

>