×

பஞ்சாப் காங்கிரஸ் பூசல் பிரியங்கா, ராகுலுடன் சித்து திடீர் சந்திப்பு

புதுடெல்லி: பஞ்சாப்பில் அதிருப்தியில் இருக்கும் சித்துவை டெல்லிக்கு அழைத்து ராகுல், பிரியங்கா பேசியுள்ளனர். பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அதிருப்தியில் உள்ள தலைவர்களை சரிக்கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பஞ்சாப்பில் முக்கிய முகமாக பார்க்கப்படும் நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த மோதலை விரும்பாத காங்கிரஸ், மேலிடம், மல்லிகார்ஜூன கார்க்கே தலைமையிலான குழுவை அமைத்தது. சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கும்படி இக்குழு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்து நேற்று திடீரென டெல்லி சென்றார். பின்னர்,  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, நீண்ட நேர சந்திப்பு நடந்ததாக கூறியுள்ளார். ராகுலை சித்து சந்திக்காமல் பிரியங்காவை மட்டும் சந்தித்தது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், நேற்றிரவு ராகுலையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


Tags : Punjab ,congressman ,Bhassel Priyanka ,Rahul , Sidhu meets Priyanka, Rahul
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து