×

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல்: ஸ்ரீஹரி நடராஜ் தகுதி

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2வது நீச்சல் வீரராக பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜ் (20) தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவில் இருந்து நீச்சல் பிரிவில் யாரும் பங்கேற்றதில்லை. இந்நிலையில் முதல் முறையாக இந்திய வீரரான  சஜன் பிரகாஷ் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்சுக்கு தகுதிப் பெற்றார். இந்த சாதனைப் பட்டியலில் 2வது வீரராக ஸ்ரீஹரி நடராஜ் இணைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்சுக்கு தகுதிபெற பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 100 மீட்டரை கடக்க 53.85 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோமில் நடந்த செட் கோலி கோப்பை போட்டியில் ஸ்ரீஹரி 100 மீட்டரை 53.77 வினாடிகளில் நீந்தி அசத்தினார். எனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஸ்ரீஹரியையும் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச நீச்சல் கூட்டமைப்புக்கு (எப்ஐஎன்ஏ) ஏற்கனவே இந்திய நீச்சல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்து. அதனை பரிசீலித்த எப்ஐஎன்ஏ நேற்று ஸ்ரீஹரியும் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.

Tags : Tokyo Olympic ,Srihari Nataraj , Tokyo Olympic swimmer: Srihari Nataraj qualifies
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் 86 கிலோ ஆடவர்...