நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையில் நசுருதீன் ஷா சேர்ப்பு

மும்பை: பழம்பெரும் நடிகர் நசுருதீன் ஷா, நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழம்பெரும் நடிகரான நசுருதீன் ஷா (70), நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பையில் உள்ள கர் இந்துஜா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இந்த தகவலை அவரது மனைவி ரத்னா பதக் ஷா நேற்று தெரிவித்துள்ளார். உ.பி மாநிலம் பராபங்கியை சேர்ந்தவர் நசுருதீன் ஷா. இவர் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஆப்கன் மாவீரர் ஜன் பிஷன் கான் வம்சத்தில் வந்தவர் எனவும், புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவு துறை தலைமை இயக்குநர் ஷா மெஹபூப் ஆலம் ஆகியோரின் உறவினர் எனவும் கூறப்படுகிறது. சித்திரக் கதையின் ஹாலிவுட் தழுவலான தி லீக் ஆப் எக்ஸ்ட்ரார்டினரி ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் கேப்டன் நெமோ என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்பர்ஷ், ஆக்ரோஷ், மிர்ச் மசாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

Related Stories:

>