×

மிசோரம் மீது அசாம் போலீஸ் படையெடுப்பு

அஜ்வால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் - மிசோரம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. மிசோரமின் அஜ்வால், கோலாசிப், மமித் ஆகிய 3 மாவட்டங்கள், அசாம் மாநிலத்தின் கச்சார், கரீம்கஞ்ச், கைலாகண்டி மாவட்டங்களுடன் 164.6 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லையில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு உள்ளது.  இந்நிலையில், கோலாசிப் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை அசாம் தனது போலீஸ் படையை அனுப்பி ஆக்கிரமித்து உள்ளதாக மிசோரம் குற்றம்சாட்டி உள்ளது. கோலாசிப் மாவட்ட எஸ்பி. வன்லால்பகா ரால்டே கூறுகையில், ``அசாம் மாநிலத்தின் கைலாகண்டி மாவட்ட துணை கமிஷனர், எஸ்பி ஆகியோர் கோலாசிப் மாவட்டத்தின் வேரியங்டே கிராமத்தில் உள்ள அய்ட்லாங் நார் பகுதியில் பெரிய போலீஸ் படையுடன் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து உள்ளனர். ஆயுதம் ஏந்திய அசாம் போலீசார், அங்கிருந்த விவசாயிகளை விரட்டி அடித்துள்ளனர்,’’ என்றார்.

Tags : Assam ,Mizoram , Assam police raid on Mizoram
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்