×

கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜம்மு இளம்பெண்ணுக்கு சீக்கியருடன் திருமணம்: சமூக வலைதளங்களில் வைரல் புகைப்படம்

ஸ்ரீநகர்:  ஜம்முவில் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணுக்கு, நேற்று சீக்கிய வாலிபருடன் திருமணம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 4 சீக்கிய இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதை கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மத மாற்றத்தை தடுக்கும்படி ஒன்றிய அரசிடமும் மனு அளித்தது. அதே நேரம், இதில் சம்பந்தப்பட்ட பெண்களில் ஒருவர், தான் விருப்பப்பட்டே மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படியும் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ஜம்முவில் இஸ்லாமிய வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படும் சீக்கிய இளம்பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு சுக்பிரீத் என்ற சீக்கிய வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. புல்வாமாவில் இருக்கும் குருத்வாராவில் அவர்களின் திருமணம் நடந்தது. பின்னர், அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். இது தொடர்பாக  சிரோன்மணி அகாலி தளத்தின் டெல்லி தலைவர் பரம்ஜித் சிங் சர்னா கூறுகையில், “இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடக்கவில்லை. அவருக்கு இப்போதுதான் திருமணம் நடந்துள்ளது,” என்றார். அந்த சீக்கிய பெண், தனது கணவருடன் டெல்லி குருத்வாராவில் வழிபாடு செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Jammu , Jammu girl marries Sikh for allegedly forcing conversion: Viral photo on social media
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு