டெல்லியில் வாட்டுகிறது வெயில்

புதுடெல்லி: டெல்லியில் பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று அதிகபட்ச 111.92 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. டெல்லியில் ஜூன் 27ம் தேதி தொடங்கும் பருவமழை, ஜூலை 8ம் தேதிக்குள் நாடு முழுவதும் பெய்வது வழக்கம். ஆனால், இம்முறை பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று வெயிலின் கொடூரம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. லோதி சாலை 42.6, ரிட்ஜ் 43.4, புசா 44.4, நஜாப்கர் 44.4, பீதம்புரா 44.3, மங்கேஷ்புர் 44.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. வழக்கத்தை விட கூடுதலாக 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Related Stories:

>