அரிய வகை நோய்க்கான மருந்தின் விலை ரூ.16 கோடி தமிழக குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்கான ஒரே மருந்தின் விலை ரூ.16 கோடி. இந்த மருந்தை, குழந்தை 2 வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார்.2 வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற,உ.பி.யை சேர்ந்த இஷானி என்ற குழந்தைக்கு, சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்து, எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாகத் தருவதாக அறிவித்து இருக்கின்றது. அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து மருந்தை, தமிழ்நாட்டு குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத் தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>