தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்டுக!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழிகக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில் தருமபுரி பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அரூர் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் கிரானைட் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>