×

ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத்துக்கு 4 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத்துக்கு 4 நாள் போலீஸ் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை இந்த கும்பல் கொள்ளையடித்தது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் கொள்ளை தொடர்பாக ஹரியாணா மாநிலம், பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் (37) என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (23), மற்றும் நஜிம் உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவலை நீதிபதி பிறப்பித்தனர். வீரேந்தர் ராவத்துக்கு 4 நாள் போலீஸ் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு தரமணி காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த நிலையில் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

Tags : Werender Ravat , ATM robbery, Virender Rawat, court, order
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...