2022ல் பஞ்சாப் பேரவை தேர்தல்: 300 யூனிட் இலவச மின்சாரம்..! கெஜ்ரிவால் வாக்குறுதி

சண்டிகர்:  டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சண்டிகர் பிரஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், மின்சார பில் தள்ளுபடி வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இதைச் செய்வதன் மூலம், பஞ்சாபில் சுமார் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் பூஜ்ஜிய மின்சார பில் பெறுவார்கள். பழைய மின்சார பில் கட்டத்தேவையில்லை. தங்களது வருமானத்தில் பாதியளவு மின்சார கட்டணத்திற்கே செல்வாகிறது என சில பெண்கள் கூறுகின்றனர். அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? வீட்டில் ஒரு மின்விசிறி, இரண்டு லைட் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது. இதுபோன்ற தவறுக்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுமட்டுமல்ல பழைய மின் கட்டண அரியர்ஸை யாருமே கட்டத் தேவையிருக்காது. நாட்டிலேயே மின்சார செல்வு டெல்லியில்தான் மிகக்குறைவு. இதை செய்ய நாங்கள், பஞ்சாப்பிலும் செய்ய முடியும்’ என்றார்.

Related Stories:

>