×

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதல்வர் ரங்கசாமி இழுத்தடிப்பு!: பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி இழுத்தடிப்பதால் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் 12 பேர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர், சபாநாயகர் பதவி பிரிப்பதில் இழுபறி ஏற்பட்டு ஒரு வழியாக என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பாஜகவுக்கு ஒரு சபாநாயகர், 2 அமைச்சர் என 55 நாட்களுக்கு பிறகு கடந்த 27ம் தேதியன்று பதவியேற்றனர்.

ஆனால் அமைச்சர்கள் பதவியேற்று 4 நாட்களாகியும் இதுவரை இலாகா ஒதுக்காமல் முதல்வர் ரங்கசாமி தாமதம் செய்வதாக பாஜக-வினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பாஜக அமைச்சர்கள், 6  எம்.எல்.ஏக்கள், 3 நியமன எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் டெல்லி செல்லவுள்ளனர். அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளனர்.


Tags : Rangasami ,Ilaga ,BJP ,M.D. L. The ,Modi , Puducherry Minister, Portfolio, BJP Ministers, MLAs, Prime Minister Modi
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...