×

டெல்டா வகை வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டது: மாஸ்கோவின் கேமலெயா கழகம் தகவல்

மாஸ்கோ: டெல்டா வகை வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாக மாஸ்கோவின் கேமலெயா கழகம் தெரிவித்துள்ளது. வேகமாகப் பரவக் கூடியது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என, வல்லுநர்களால் அச்சம் தெரிவிக்கப்பட்ட கோவிட் வைரசின் டெல்டா வகை வைரஸ், ரஷ்யாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. ரஷ்யாவில் புதிதாகப் பதிவாகும் தொற்று பாதிப்புகளில், 90 சதவீதம் டெல்டா வகை வைரஸ் எனத் தெரியவந்துள்ளது. தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வில், டெல்டா வகை வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து 90 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 


முதன்முதலில் தோன்றிய கோவிட்-19 வைரசுக்கு எதிராக, ஸ்புட்னிக் வி, 92 சதவீதம் செயல்திறனைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அனைவருக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே, ராஷ்யாவில் கோவிட் பெருந்தொற்றின் அடுத்த அலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என மாஸ்கோவின் கேமலெயா ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 



Tags : Camelia Institute ,Moscow , Delta Type, Sputnik V, Camelia Institute of Moscow
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...