×

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை..!

மும்பை: ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கும் கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், பும்ரா,ஷிகர் தவானுக்கு அர்ஜீனா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. 


இதுதொடர்பாக பேட்டிகொடுத்த பிசிசிஐ நிர்வாகி, “கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலைத் தயாரிக்க பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கேல் ரத்னா பிரிவில் அஸ்வின், மிதாலி ராஜையும், அர்ஜுனா விருதுக்கு தவன், பும்ரா, ராகுல் ஆகியோரின் பெயர்களையும் இறுதி செய்தோம்” எனத் தெரிவித்தார். இப்பரிந்துரைப் பட்டியலை ஜூன் 21ஆம் தேதியே சமர்ப்பித்திருக்க வேண்டும். கொரோனா காரணமாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மற்ற விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த பரிந்துரைப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கேல் ரத்னா விருதுகளை மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, மனிகா பட்ரா, வினேஷ் போகட், ராணி ரம்பால் ஆகியோர் பெற்றனர். ஒரே வருடத்தில் 5 விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா வழங்கியது கடந்த ஆண்டில்தான். சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், அதிக விக்கெட்களை கைப்பற்றி பௌலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், 71 விக்கெட்களுடன் முதலிடம் பிடித்தார். பாட் கம்மின்ஸ் (70), ஸ்டூவர்ட் பிராட் (69) ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Aswin , Cricketer Mithaliraj and Indian cricketer Aswin nominated for Rajiv Gandhi Kale Ratna
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி