10 பேர் கிட்ட இல்ல; சசிகலா ஆயிரம் பேர் கிட்ட பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை : எடப்பாடி பழனிசாமி தடாலடி!!

சென்னை : தமிழகம் முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது; தடுப்பூசி மையங்களில் உள்ள விவரங்களை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை, கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது; தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல திமுக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்; நீட் தேர்வு நடைபெறுமா ?நடைபெறாதா? என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் முதல்வர் ஆகிவிட்டேன் என்ற சசிகலாவின் ஆடியோ பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “சசிகலா அதிமுகவில் இல்லை; அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில் யாரோ சிலரிடம் அவர் பேசுவதே பெரிதுபடுத்த வேண்டாம். 10 பேர் கிட்ட இல்ல; ஆயிரம் பேர் கிட்ட பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் நலிவடைந்துள்ள வழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்; கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.திமுக அரசு தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories:

>