×

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி, செயல்விளக்கம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் கற்பகவெண்ணிலா முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தீ தடுப்பு குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் விரிவாக விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து கோயில் வாசலில் உள்ள திடலில் எண்ணெய் சட்டியில் சமையல் செய்யும்போதுதீ விபத்து ஏற்பட்டால் நனைந்த சாக்குகளை வைத்து தீயை எப்படி கட்டுப்படுத்துவது ? தீயணைப்பான் மூலம்தீ விபத்தை எப்படி கட்டுப்படுத்துவது ? என்பது குறித்தசெயல்விளக்கமும் செய்து காண்பித்தார்.

நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், கரம்பயம் முத்துமாரியம்மன்கோவில், பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோயில், தாமரங்கோட்டை கண்டேஸ்வரர் கோயில், பாலத்தளி துர்க்கையம்மன் கோயில், ஏனாதி செல்லியம்மன் கோயில்களைச் சேர்ந்த கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pattukottai Nadiamman Temple , Fire prevention training and demonstration for the staff of Pattukottai Nadiamman Temple
× RELATED பட்டுக்கோட்டை நாடியம்மன்...