×

சேதுபாவாசத்திரம் பகுதியில் கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள்: விசைப்படகுகளில் டீசல், தளவாட சாமான்களை ஏற்றினர்

சேதுபாவாசத்திரம்:தஞ்சை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கடலுக்கு செல்ல தயாராக படகுகளில் டீசல் மற்றும் தளவாட சாமான்களை விசைப்படகு மீனவர்கள் ஏற்றினர். மீன் இனப்பெருக்க காலம் என அரசு அறிவித்து ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 246 விசைப்படகுகள் இருந்தன.2018 ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சுமார்188 படகுகளை விறகாக்கி சென்றது. இதனால் அரசு வழங்கிய நிவாரணத்தை கொண்டு சுமார் 146 விசைப்படகுகள் மராமத்து செய்து அந்த படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து வருகிறது.

மீன்பிடி தடைக்காலம் கடந்த 15 ம்தேதி நிறைவடைந்த நிலையில் கொரோனா 2 ம் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் அதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதே சமயம் தஞ்சை மாவட்டத்தில் தாக்கம் குறையாததால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்விற்பனை செய்யும் இடங்களில் வெளியூர்,வெளிமாநில வியாபாரிகளால் கூட்டம் அதிகரித்து தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைந்து இருப்பதால் நேற்று நள்ளிரவு கடலுக்கு செல்வதற்காக படகுகளில் டீசல் மற்றும் தளவாட சாமான்களை ஏற்றி தயாராகி வருகின்றனர்.கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று காரணமாக 75 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

Tags : Sethupavasathiram , Fishermen ready to go to sea as corona impact recedes in Sethupavasathiram area: Diesel and logistics loaded on key boats
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியம்...