×

தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுசார் பணிகளுக்காக தமிழக சட்ட நிறுவனம் தேர்வு

சென்னை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் ஆராய்சிகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அறிவுசார் பணிகளை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து சட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பணிக்காக புதுடெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன.  இதில், சென்னையை சேர்ந்த பா.சஞ்சய் காந்தி தலமையிலான அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சட்ட நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.  சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்ற வக்கீல் பா.சஞ்சய்காந்தி தலைமையிலான அறிவுசார் சொத்துரிமை சட்ட நிறுவனம் தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டு, பத்தமடை பாய், கோவை கோரா காட்டன், கோவில்பட்டி கடலை மிட்டாய், வில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 25 பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu Agricultural University ,Tamil Law Institute for Intellectual Work , Tamil Nadu Law Institute selected for intellectual work of Tamil Nadu Agricultural University
× RELATED வேளாண் பல்கலையில் ரெடிமேட் உணவுகள் தயாரித்தல் பயிற்சி