பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு தளர்வுகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டு பாதுகாப்புடன் இருப்பதுடன், அனைவரையும் பாதுகாத்திட வேண்டும். எனவே, தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

Related Stories: