×

மின்வெட்டு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது மின் உற்பத்தியை அதிகரிக்க அதிமுக முயற்சிக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞரால் கொண்டு வரப்பட்ட பல்வேறு மின் திட்டங்கள், கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.எந்த புதிய திட்டங்கள் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 2006ல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமான 1800 மெகா வாட் அளவுக்கு புதிய உற்பத்தியை 2014ல் தொடங்கி இருக்கிறது. இது 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். அதற்கு பிறகு முந்தைய அரசால் எந்தவித புதிய மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்தவில்லை. கடந்த 19ம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தாம் பொதுவாக புகார் கூறக்கூடாது.



Tags : Minister ,Sentai Balaji , AIADMK should not try to increase power generation: Minister Senthil Balaji
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி