கொரோனா தடுப்பூசி வழங்காமல் மக்கள் உயிரோடு ஒன்றிய அரசு விளையாடுகிறது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் ஒன்றிய பாஜ அரசு ஆரம்பத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழக அரசு தடுப்பூசி போடுவதை மக்களியக்கமாக்கி வருகிறது. இதற்கு உதவ வேண்டிய ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளை உரிய காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைபட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்திய பின்னரும் ஒன்றிய அரசு பாரபட்ச அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்கள் உயிரோடு விளையாடுவது வன்மையாக கண்டிக்கதக்கது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

More