வழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக அரசு, இளம் வழக்கறிஞர் சமுதாயத்தினருக்கு கொரோனா பேரிடர் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்களுக்கும் உடனடியாக கொரோனா நிவாரண நிதியும், வாழ்வாதார நிதியும் வழங்க வேண்டும். மேலும், கொரோனா நோய் தொற்றுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>