பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: பெட்ரோல்,,டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்ட செயலாளர் சி.சங்கர் தலைமை வகித்தார். விசிக மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரணமாக 7500 வழங்க வேண்டும், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் .முத்துக்குமார், கே.நேரு, இந்திய கம்யூனிஸ்ட் ஜெ.கமலநாதன், ஏ.மூர்த்தி, விசிக கோ.திருமாதாசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கு.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெட்ரோல். டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் தி.வ.எழிலரசு முன்னிலை வகித்தார்.தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். உணவு தானியங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு 7,500 நிவாரண தொகையாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை தடையின்றி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வின்சென்ட், சேகர், கவியரசன், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி பெருமாள், வினாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி செயலாளர் சொக்கலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய நிர்வாகிகள் பார்த்தீபன், முனுசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், ஒன்றிய தலைவர் லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Stories:

>