×

யூரோ கோப்பை கால்பந்து காலிறுதியில் ஸ்பெயின், சுவிஸ்

கோபென்ஹேகன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில்  ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறின. கோபென்ஹேகன் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  குரோஷியா - ஸ்பெயின் அணிகள் மோதின.  ஆட்டம் தொடங்கிய 20 நிமிடத்தில்  ஸ்பெயின் வீரர் பெத்ரி  அடித்த சுய கோல் மூலம் குரோஷியா கோல் கணக்கை தொடங்கியது.  தொடர்ந்து  ஸ்பெயின் வீரர்  சரபியா 38வது நிமிடத்திலும், அஸ்பிலிகுயடா 57வது நிமிடத்திலும்,  ஃபெரன்   77வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதனால் ஸ்பெயின் 3-1 என முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியது. ஆனால், விடாப்பிடியாக போராடிய குரோஷிய அணிக்கு ஆர்சிக்  (85வது நிமிடம்), பசலிக்  (90’+2) கோல் அடிக்க ஆட்டம் டிராவானது.

அதன் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில்  ஸ்பெயின் வீரர்கள் மொராட்டா, ஒயர்சாபல் ஆகியோர் அடுத்தடுத்து  கோலடித்தனர். அதனால் ஸ்பெயின் 5-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Tags : Spain, Switzerland ,Euro Cup , Spain, Switzerland in Euro Cup football quarterfinals
× RELATED யூரோ கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றில் டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா