பிரான்ஸ் அதிர்ச்சி

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணியுடன் சுவிட்சர்லாந்து மோதியது.  பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றதால் அந்த அணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த  நிலையில், கடைசி கட்டத்தில் சுவிஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில்  டிரா ஆனது. பிரான்ஸ் தரப்பில் பென்ஸிமா (57’, 59’), போக்பா (75’) கோல் அடித்தனர். சுவிஸ் வீரர்கள் செபரோவிச் (15’, 81’), கவ்ரனோவிச் (90’) கோல் போட்டனர். கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடத்தில் கோல் ஏதும் விழவில்லை.  அதனால் ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சுவிஸ் அணி 5 வாய்ப்பிலும் கோல் அடித்து 5-4 என முன்னிலை வகிக்க, பிரான்ஸ் அணியின் கடைசி வாய்ப்பை நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே தவறவிட்டார். அதனால் சுவிட்சர்லாந்து (3-3) 5-4 என்ற  கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories:

>