விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்வியாடெக்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். முதல் சுற்றில் சீன தைபே வீராங்கனை சூ வெய் சையுடன் (35 வயது, 69வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 9வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) தனதி முதல் சுற்றில் ஸ்பெயினின் கர்லா சுவாரெஸ் நவரோவுடன் (32 வயது, 138வது ரேங்க்) நேற்று மோதினார். முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஆஷ்லி, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அடுத்த செட்டை 6-7 (1-7) என இழக்க சமநிலை ஏற்பட்டது.

எனினும், கடைசி செட்டில் மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி 6-1, 6-7 (1-7), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த போட்டி 1 மணி, 44 நிமிடத்துக்கு நீடித்தது. அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் (41 வயது, 111வது ரேங்க்) 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் மிகேலா புஸார்னெஸ்குவை (ருமேனியா) வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: