×

500 டன் எடை கற்களில் சிற்பங்கள் அபுதாபியில் பிரமாண்ட கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களே அதிகளவில் உள்ளனர். இங்கு, அவரவர் கலாசாரத்தை பின்பற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி, அபுதாபி அல் ரக்பா பகுதியில் பிரமாண்ட இந்து கோயிலை கட்ட  ஐக்கிய அரபு அமீரக அரசு 27 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளித்தது. இந்த கோயிலுக்கான அடிக்கல்லை 2018ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி  காணொலி மூலமாக நாட்டினார்.  55 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக உருவாகும் இந்த கோயிலின் அடித்தளத்துக்கு இரும்பு  போன்ற உலோகங்கள் இன்றி, பாரம்பரிய முறைப்படி நிலக்கரி சாம்பல் பாறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கோயிலில் இடம் பெற சிற்பங்களை 2500க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் மூலம் இந்தியாவில் 500 டன் எடை கொண்ட கற்களில் உருவாக்கப்படுகிறது.  மேலும், 5 ஆயிரம் டன் எடையுள்ள இத்தாலி கராரா மார்பில் சலவை கற்கள் பயன்படுத்தப்படுகிறது 2023ம் ஆண்டு இந்த பணிகள் அனைத்தும் முழுமை பெறும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

Tags : Abu Dhabi , 500 Ton Stone Sculptures The construction of the Great Temple in Abu Dhabi is in full swing
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!