வாலாஜாபாத் ஜமாபந்தியில் 76 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபத் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி, கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டு,  அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இணைய தளம்  மூலம் இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், ஆதரவற்ற விதவை சான்றிதழ் உள்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டன.  இந்த மனுக்களை பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டது.இதில் முதற்கட்டமாக 76 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.  

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா 16, பட்டா மாறுதல் 5, ஆதரவற்ற விதவை சான்றிதழ் 3, முதியோர் உதவித்தொகை 52 ஆகியவற்றுக்கான ஆவணங்களை, பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வாலாஜாபாத் தாசில்தார் உமா, முதியோர் உதவித்தொகை தனி தாசில்தார் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: