×

சென்னை பூவிருந்தமல்லி அருகே ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!!

சென்னை: சென்னை பூவிருந்தமல்லி அருகே ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. சென்னை பூவிருந்தமல்லி அருகே மேவலூர்க்குப்பம் என்ற கிராமத்தில் சுமார் 36 ஏக்கர் நிலமானது தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய இந்த நிலம், ஒரு சில நபர்களால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு புறம்போக்கு நிலத்தில் தோட்டம், கட்டிடங்கள் அமைத்திருந்தனர். 


இதுகுறித்து பல முறை புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் துறையினர் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தம் எனவும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைத்தனர். 


இதேபோன்று அருகில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



Tags : Poovirunthamalli ,Chennai , Chennai, Rs 200 crore, Occupied Land, Revenue Department
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...