×

மராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது: சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மராட்டியத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரவாத் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவருமான சரத்பவரை நேரில் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரேயின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான வர்ஷா பங்களாவுக்கு சென்ற அவர் முதல்வரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். கடந்த 3 நாட்களில் இதுபோன்ற சந்திப்பு நிகழ்வது 2-வது முறையாகும். இந்த சந்திப்பு காரணாமாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்கள் நீங்கள் சரத்பவாரிடம் இருந்து ஏதாவது செய்தியை முதல்வருக்கு கொண்டு சேர்க்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த சஞ்சய் ரவாத், உங்களுக்கு ஏதாவது தகவலை சொல்லவேண்டும் என்றால் கூறுங்கள்; நான் சரத்பவாரிடம் கொண்டு சேர்க்கிறேன் எனக் கூறினார்.

மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஏற்கனவே கூறியபடி மகா விகாஸ் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அதன் முழு பதவிகாலமும் நீடிக்கும் என சரத்பவார் ஏற்கனவே கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Great Vikas Alliance Government ,Sanjay Ravat , The Maha Vikas Coalition Government is doing well in the Marathas: Interview with Sanjay Rawat
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி