நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா தொற்று பரவல், மூன்றாவது கொரோனா அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக பேச உள்ளனர்.

இதனையடுத்து நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் 2 ஆலோசனை கூட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>