×

துரோகத்தை வீழ்த்த வருகை தரும் தியாகமே!: திருப்பரங்குன்றத்தில் சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகி பகிரங்க ஆதரவு போஸ்டர்..!!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகிகள் பகிரங்க ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மதுரை மாவட்ட கவுன்சிலருமான லெட்சுமிராஜன் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். கடந்த வாரம் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக ராஜன் செல்லப்பா தலைமையில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


மேலும் அவருடன் தொடர்பு கொள்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா ஆதரவாளர்கள், அதிமுக சசிகலாவுக்கு ஆதரவு என போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை சசிகலா தான் வழிநடத்தி வருவதாக லெட்சுமிராஜன் குறிப்பிட்டிருக்கிறார். 


ஒன்றரை கோடி தொண்டர்களின் உண்மையான அதிமுக, சசிகலா தலைமையில் தான் இருப்பதாகவும், பொதுச் செயலாளர் குறித்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சசிகலாவின் பக்கமே அதிமுக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல ஊர்களில் சசிகலாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தீர்மானங்களை அதிமுகவினர் நிறைவேற்றி வருகின்றனர். இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பகிரங்கமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். 



Tags : Sasila ,Tirunakurutham , Thiruparankundram, Sasikala, AIADMK executive, poster
× RELATED எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுக...