×

நீண்ட நாட்களுக்கு பின்பு கோவில்கள் திறப்பு : வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று இந்த மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ததால், கோவில்களில் அதிகம் கூட்டம் இல்லை.


இந்த நிலையில் இன்று  செவ்வாய் கிழமை என்பதால், முருகன் கோவில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் முருகன்  கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர். மற்ற கோவில்களில் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா காலத்தில் கோவில்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் பலர் திருமணம் செய்து கொண்டனர். ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.



Tags : Sami , Opening of temples, queue, devotees, Sami darshan
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...