×

ஆஸி.யில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வயது வரம்பு நீக்கம்!: ஒரே நேரத்தில் மக்கள் படையெடுப்பதால் ஊழியர்கள் திணறல்..!!

நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோரின் வயது வரம்பு தளர்த்தப்பட்டிருப்பதை அடுத்து தடுப்பூசி மையங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் படையெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகமுள்ள 50 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி விநியோகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் வயது வரம்புகளை நீக்கி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தடுப்பூசி மையங்களை மக்கள் நாடி வருகிறார்கள். 


ஒரே நேரத்தில் மக்கள் திரண்டு வருவதால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. காரில் இருந்தவாறே அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு சில நாட்களாக கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதை அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகளவில் சுகாதார மையங்களை நாடி வருகின்றனர். 


ஆஸ்திரேலியாவில் தற்போது ஆஸ்ட்ரா ஜெனிகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைவர் கிளாடிஸ் தெரிவித்ததாவது, அனைத்து வயதினரும், தங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் குறிப்பிட்ட இடைவெளியில் 2வது தடுப்பூசியும் தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள். பெரும்பாலோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.



Tags : Aussie , Aussie., Vaccine, age limit, population invasion
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...