×

எங்கேயும் மத்திய அரசை நான் ஒன்றிய அரசு என்று கூறவில்லை.: ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பின்போது இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட்டது பற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டது. அப்போது புதுச்சேரி அமைச்சர்கள், இந்திய ஒன்றியத்தின் என குறிப்பிட்டு, பதவி ஏற்றது திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தான், இப்படி கூற வைத்து, பதவி ஏற்க செய்துள்ளார் என்பதால் மொத்த எதிர்ப்பும் அவரை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

INDIAN UNION TERRITORY என்பது இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்றே புதுவை அரசால் மரபாக பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரி அரசின் மரபுப்படி தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் இன்றி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் INDIAN UNION TERRITORY OF PUDHUCHERRY என்பது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ஒன்றியம் எனக் குறிப்பிடுவது UNION TERRITORY என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத் தான். எனவே எங்கேயும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Central , Nowhere do I say that the Central Government is a United Government .: Governor Tamil Music Interpretation
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!