×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நெல்லை, தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஏர்வாடி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக சார்பில் ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளரான ரூபி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்றார்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஏர்வாடியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பெரும்படையார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளரான வக்கீல் முருகன், விசிக நாங்குநேரி தொகுதி செயலாளர் ஈழவளவன் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளரான ரூபி மனோகரன் எம்எல்ஏ, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் முருகானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முருகன், சுகுமாரன், பூலுடையார், விசிக ஒன்றியச் செயலாளர் சுபாஷ், பாண்டி, முத்துகுமார், கோதை முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விசிக ஏர்வாடி நகரச் செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

 தென்காசி: தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் அயூப்கான் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துபாண்டி துவக்கிவைத்துப் பேசினார். விசிக மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங் கோரிக்கையை விளக்கினார். பார்வர்ட் பிளாக் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலாளர் அயூப்கான் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கித்துரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   திருவேங்கடம்: திருவேங்கடம் மெயின் பஜாரில் காந்தி மண்டபம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் அந்தோனிராஜ், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் வேணுகோபால், விசிக தாலுகா செயலாளர் கனியமுதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு சுப்பையா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உச்சிமாகாளி, விசிக இலக்கிய அணி இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா துணைச் செயலாளர் பவுல்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், மார்க்சிஸ்ட் விவசாய சங்க தாலுகா செயலாளர் கருப்பசாமி, வக்கீல் ராகவன், திருவேங்கடம் லட்சுமி நாராயணன், அத்திப்பட்டி குருசாமி, முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 ஆலங்குளம்: ஆலங்குளம் காமராஜர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் குணசீலன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், விசிக ஒன்றியச் செயலாளர் எட்டப்பன், மருதம்புத்தூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நல்லையா, மகாவிஷ்ணு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் கொரோனா காலத்தில் வருவாய் இழந்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தினர். இதில் மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் உடையாம்புளி கிளைச் செயலாளர் அணைக்கரைமுத்து, வெற்றிவேல், கனகராஜ், மாரியப்பன், ஆறுமுகம், அருணாசலம், குமார், உஷா, சின்னத்தாய் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தாலுகா குழு உறுப்பினர் பாலு நன்றி கூறினார்.

 அம்பை:  இதே போல் அம்பாசமுத்திரம் ஸ்டேட்  பேங்க் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச்  செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்  மாவட்ட செயற்குழு  உறுப்பினர் மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள்  ஒன்றியச் செயலாளர் பீமாராவ், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன்,  மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், இசக்கிராஜன், இந்திய கம்யூனிஸ்ட்  மைதீன்பிச்சை, சபியாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Nellai ,Tenkasi , Ervadi: Communist, Marxist, Vizika in various parts of Nellai and Tenkasi districts condemned the hike in petrol and diesel prices.
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!