×

டெல்டா வகை கொரோனா: இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை

இங்கிலாந்து: டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தலால் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. 


வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.  டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் மூலமாக  ஹாங்காங்கிலும் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹாங்காங் தடை விதித்துள்ளது



Tags : Delta ,Hong Kong ,UK , Delta type, Corona, UK, Hong Kong banned
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு